← Tamil 135

Thiraatchath Thottakkaaranoruvan Aththi Maraththai Nattaan

Lyrics
Verse 1

திராட்சத் தோட்டக்காரனொருவன் அத்தி மரத்தை நட்டான் திராட்சக் கொடிகள் நடுவே தானும் செழித்து வளர்ந்தது அத்தி அத்தியை சுற்றி கொத்தி எருவை தோட்டக்காரன் இட்டான் எஜமான் பின் சில வருடம் கழித்து அத்தியைக் காண விரைந்தான் சுத்தி முத்தி பார்த்தும் அத்தியில் கனியை எங்கும் காணோம் கனியிலா அத்தியைக் கத்தியால் வெட்டி எட்டிப் போடச் சொன்னான் தோட்டக்காரன் பணிந்து அவ்விடம் பரிந்து பேசி நின்றான் இவ்வருடம் இது கனிகொடுக்காவிடில் வெட்டியெறியலாம் என்றான் எஜமானாகிய நம் பிதாவும் நற்குணத்தின் கனியை நாள்தோறும் நாம் நல்கிட நாடி நவிந்து நோக்கிடுகின்றார் தோட்டக்காரன் இயேசு நமக்காய் பரிந்து பேசிடுகின்றார் கனி தருஞ் ஜீவியம் செய்யாதவரே நித்திரை விட்டு எழுவீர்! செல்லாதுமது வெதுவெதுப்பு! சாங்கோபாங்கம் விடுவீர் குளிரோ, அனலோ எதுவும் இல்லையேல் வாந்தி பண்ணப்படுவீர் கனிகள் நூற்றுக்கு நூறு தருவோர் புதிய எருசலேம் செல்வார் ஜீவ விருட்ச கனி அங்கு உண்டிட இங்கு கனிகளைத் தருவீர் கனிகள் வகையும் பலவாம் அதனுள் மனந்திரும்புவது முதலாம் உதடுகளின் கனி ஸ்தோத்திர பலியாம், நீதியின் கனியும் தேவை நற்கிரியைகளின் கனியும் உண்டு, ஆவியின் கனியோ அன்பாம் அன்பாம் கனியில் பல ரகம் உண்டு, அவற்றையும் விரும்புவார் இயேசு சந்தோஷமோ பரவசத்தில் அன்பு சமாதானமோ இளைப்பாறும் அன்பு நீடிய பொறுமை சோதனையில் அன்பு தயவென்னும் கனியோ வழிந்தோடும் அன்பு நற்குணமன்றோ கிரியை செய்யும் அன்பு விசுவாசமோ போர்முனையில் அன்பு எளியதாம் சாந்தம் பள்ளி பயிலும் அன்பு இச்சையடக்கம் பயிற்சி செய்யும் அன்பு

Verse 1

Thiraatchath Thottakkaaranoruvan Aththi Maraththai Nattaan Thiraatchak Kodigal Naduve Thaanum Sezhiththu Valarndhadhu Aththi Aththiyai Sutri Koththi Eruvai Thottakkaaran Ittaan Ejamaan Pin Sila Varudam Kazhiththu Aththiyaik Kaana Viraindhaan Suththi Muththi Paarththum Aththiyil Kaniyai Engum Kaanom Kaniyilaa Aththiyaik Kaththiyaal Vetti Ettip Podach Sonnaan Thottakkaaran Panindhu Avvidam Parindhu Pesi Nindraan Ivvarudam Idhu Kanikodukkaavidil Vettiyeriyalaam Endraan Ejamaanaagiya Nam Pidhaavum Narkunaththin Kaniyai Naaldhorum Naam Nalgida Naadi Navindhu Nokkidugindraar Thottakkaaran Yesu Namakkaay Parindhu Pesidugindraar Kani Tharunj Jeeviyam Seyyaadhavare Niththirai Vittu Ezhueveer! Sellaadhumadhu Vedhuvedhuppu! Saangopaangam Viduveer Kuliro, Analo Edhuvum Illaiyel Vaanthi Pannappaduveer Kanigal Nootrukku Nooru Tharuvaar Pudhiya Erusalem Selvaar Jeeva Virutcha Kani Angu Undida Ingu Kanigalaith Tharuveer Kanigal Vagaiyum Palavaam Adhanul Manandhirumbuvadhu Mudhalaam Udadugalin Kani Sthoththira Paliyaam, Neethiyin Kaniyum Thevai Narkiriyaigalin Kaniyum Undu, Aaviyin Kaniyo Anbaam Anbaam Kaniyil Pala Ragam Undu, Avattraiyum Virumbuvaar Yesu Sandhoshamo Paravasaththil Anbu Samaadhaanamo Ilaippaarum Anbu Neediya Porumai Sodhanaiyil Anbu Thayavennum Kaniyo Vazhindhodum Anbu Narkunamanro Kiriyai Seyyum Anbu Visvaasamo Pormunaiyil Anbu Eliyadhaam Saantham Palli Payilum Anbu Ichchaiyadakkam Payirchi Seyyum Anbu

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.