← Tamil 136

Erusalemilirundhu Oruvan Erikovirkuch Sendraan

Lyrics
Verse 1

எருசலேமிலிருந்து ஒருவன் எரிகோவிற்குச் சென்றான் செல்லும் வழியில் கள்ளர் கையில் சிக்கித் தவித்து நின்றான் சற்றும் இரக்கம் அற்ற கல் நெஞ்சுற்ற கள்ளர் அவனை ஆடை உரிந்து காயமாக்கிக் குற்றுயிராய் விட்டார் தற்செயலாய் அவ்வழியொரு ஆசாரியன் வந்தான் அவனைக் கண்டு அக்கம்பக்கம் பார்த்து விலகிச் சென்றான் உடன்தானே அவ்வழியொரு லேவியனும் வந்தான் இவன் தானும் அந்தப்படி வந்தபடி போனான் பின்பு ஒரு சமாரியன் பிரயாணமாய் வந்தான் குற்றுயிராய்க் கிடந்தோனைக் கண்டு மனது உருகி கிட்ட வந்து, எண்ணெய் வார்த்து, பட்டகாயங்கட்டி திராட்சரசம் நல்கிச் சுய வாகனத்தில் ஏற்றி சத்திரத்தில் கொண்டு சென்று விட்டு ஆதரித்து மீண்டும் காலை போகும் முன்பு சத்திரத்தான் கையில் இரண்டு பணம் தந்து இவன் காரியத்தைச் சொல்லி அதிகம் செலவு ஆகும் என்கில் கவலை ஒன்றும் வேண்டாம் மீண்டும் வந்து தந்திடுவேன் என்றுறுதி சொன்னான் இயேசு சொன்ன இவ்வுவமை அர்த்தம் மிக்கதையா பரிசுத்தர் ஐக்கியம் என்னும் எருசலேமை விட்டு சுகந்த வாச ஜீவியமாம் எரிகோவிற்குச் சென்றால் ஐக்கியமற்ற வாழ்வில் தீயோன் புகுந்து தீமை செய்வான் ஆசாரியர் லேவியரோ உதவி புரிய இயலார் பூரணத்தின் ஊழியத்தை ஆரம்பித்த இயேசு சமாரியன் போலத் தேற்றி சமாதானம் ஈந்து சத்திரத்தான் அப்போஸ்தல ஊழியத்தைச் செய்ய ஜீவன் தேவபக்தி என்னும் காசுகளும் ஈந்தார் அதிகம் ஆகும் செலவு என்னும் சபையின் ஊழியங்கள் ஆத்துமாக்கள் பூரணத்தை அடைய உதவி செய்யும் சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தார் இயேசு பாத்திரராய் மாறி ஆமென் வாரும் இயேசு என்போம்!

Verse 1

Erusalemilirundhu Oruvan Erikovirkuch Sendraan Sellum Vazhiyil Kallar Kaiyil Sikkith Thaviththu Nindraan Satrum Irakkam Atra Kal Nenjutra Kallar Avanai Aadai Urindhu Kaayamaakkik Kutruyiraay Vittaar Tharseyalaay Avvazhiyoru Aasaariyan Vandhaan Avanaik Kandu Akkambakkam Paarththu Vilagich Sendraan Udanthaane Avvazhiyoru Leviyanum Vandhaan Ivan Thaanum Andhappadi Vandhapadi Ponaan Pinbu Oru Samariyan Pirayaanamaay Vandhaan Kutruyiraayk Kidandhonaik Kandu Manadhu Urugi Kitta Vandhu, Enney Vaarththu, Pattakaayangatti Thiraatcharasam Nalgich Suya Vaaganaththil Etri Saththiraththil Kondu Sendru Vittu Aadhariththu Meendum Kaalai Pogum Munbu Saththiraththaan Kaiyil Irandu Panam Thandhu Ivan Kaariyaththaich Solli Adhigam Selavu Aagum Enkil Kavalai Ondrum Vendaam Meendum Vandhu Thandhiduveen Endruruthi Sonnaan Yesu Sonna Ivvuvamai Arththam Mikkadhaiyaa Parisuththar Aikkiyam Ennum Erusalemai Vittu Sugandha Vaasa Jeeviyamaam Erikovirkuch Sendraal Aikkiyamatra Vaazhvil Theeyon Pugundhu Theemai Seyvaan Aasaariyar Leviyaro Udhavi Puriya Iyalaar Pooranaththin Oozhiyaththai Aarambiththa Yesu Samariyan Polath Thetri Samaadhaanam Eendhu Saththiraththaan Apposthala Oozhiyaththaich Seyya Jeevan Devabakthi Ennum Kaasugalum Eendhaar Adhigam Aagum Selavu Ennum Sabaiyin Oozhiyangal Aaththumaakkal Pooranaththai Adaiya Udhavi Seyyum Seekkiramaay Vandhiduveen Endruraiththaar Yesu Paaththiraraay Maari Aamen Vaarum Yesu Enpom!

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.